Breaking
Sat. May 11th, 2024

(அனா)

ஒருவருக்கு வாக்களித்து விட்டு யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அரசியல் செய்தோமோ அவர்தான் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது கவலைக்குறிய விடயம் என்று கிராமிய பொரளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ‘YOUTH GOT TALAENT” சிரம சக்தி சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுடாக காவத்தமுனை வண்ணாங்கேணி குளத்தினை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் அல் முபாறக் இளைஞர் கழகத்தின் எற்பாட்டில் இன்று (31.08.2016) இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

பிரதேசத்தின் அபிவிருத்தியில் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் பங்கு அதிகமானதாகும் இளைஞர்கள் விளையாட்டோடு தங்களது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளமல் பிரதேசத்தினதும் தான் சார்ந்துள்ள பிரதேசத்தினதும் அபிவிருத்தியில் அதிகம் பங்கெடுத்தவர்களாக செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்படும் போதுதான் ஒவ்வொரு பிரதேசமும் அபிவிருத்தின்பால் எடுத்துச் செல்லப்படும்.

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கரை கொண்ட இளைஞர் கழகம் தேர்தல் காலத்தின் போது ஒருவரது வெற்றிக்காக உழைப்பதும் தேர்தலின் பின்னர் எவரை தோற்கடிக்க வேண்டும் என்று உழைத்தோமோ அவரிடம் என்று பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்கு முக்கியமானது எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியடைவதற்கு உங்களது ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று கூறுவது ஒருவரது நல்ல செயற்பாடாக இருக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை எனக்கு வாக்களித்தவரா அல்லது எனக்கு வாக்களிக்காமல் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று செயற்பட்டவரா என்று பார்த்து நான் சேவை செய்வதில்லை மட்டக்களபப்பு மாவட்டம் எனது மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற என்னத்துடன் செயற்பட்டுக் கொண்டு இருககும் அரசியல்வாதி நான்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து வீடு வீடாக சென்று விட்டு தேர்தல் முடிந்ததும் காணாமல் போகும் அரசியல்வாதிகளின் பின்னால் அவர்களது அறிக்கைகளை மாத்திரம் நம்பி அவர்களின் பின்னால் செல்வதை விட்டு விட்டு பிரதேசத்தின் அபிவருத்தில் அக்கரையுடன் செயற்படும் அரசியல்வாதியினை நம்பி அவர்களது வெற்றிக்காக உழகைகும் இளைஞர்களாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.unnamed (4)

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி டீஆ.றியாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பாணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றூவைத். மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.unnamed (5)

(எஸ்.எம்.எம்.முர்ஷித் – 0774343461)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *