பிரதான செய்திகள்

ஞானசார இன்று நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி உரிய மருத்துவ அறிக்கைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முறைகேடாக நடந்துகொண்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்டதுடன், ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக நீதிமன்றில் ஆஜாரவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இதனை கருத்தில் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழு சந்தேக நபரை உரிய மருத்துவ அறிக்கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (

Related posts

தமிழ் மக்களின் போராட்டத்திலும்,உரிமை விடயத்திலும் கரிசனை கொள்ள தமிழ் அரசியல்வாதிகள்

wpengine

வடக்கு அபிவிருத்திக்கான தடைகள் விரைவில் நீக்கப்படும்- ஜனாதிபதி

wpengine

61 பயணிகளுடன் சென்ற FlyDubai விமானம் ரஷ்யாவில் விபத்திற்குள்ளானது

wpengine