கிளிநொச்சிபிராந்திய செய்தி

97.2 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் கிளிநொச்சி . ..! அரச அதிபர் அறிவிப்பு . ..

கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளதுஎன கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை கிராம அலுவலர் பிரிவிலேயே குறித்த 2.7 வீதமான பகுதிகள் அகற்றப்படாமல் உள்ளது. 

இதனால் 37 குடும்பங்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலை காணப்படுவதாகவும்  கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களுடன் நடைபெற்ற இரண்டு கலந்துரையாலைத் தொடர்ந்து இந்த வருடம் எட்டாம் மாதத்தில் கண்ணிவெடியகற்றிய பிரதேசங்களை கையளிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்கள். 

விரைவாக குறித்த 37 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்த முடியும் என தெரிவித்தார்.

Related posts

5000 ரூபா பணம் கொடுத்து உதவி செய்த கே.காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டு சிங்கள மக்களின் மத்தியில் விஷமத்தனமான பிரச்சாரங்கள்

wpengine

முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்

wpengine