தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

70 கோடி சம்பாதித்த சிறுவன்

இணைய தளங்களில் வெளியிடப்படும் வீடியோ மூலம் பலர் பிரபலமாகின்றனர். அவ்வாறு யூ டியூப் மூலம் பிரபலமானவர்களின் பட்டியலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ரியான் பெற்றுள்ளான்.

ரியான் மூன்று வயது முதல் தனது விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர் அதனை வீடியோ எடுத்து யூ டியூபில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அவனின் குழந்தை மொழிக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.

தற்போது 6 வயது ஆகும் ரியான், தனது வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளான். மிகச்சிறிய வயதிலேயே யூ டியூப் பிரபலமான ரியானுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன் மூலம் ஒரே ஆண்டில் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான்.

இணையதளங்களில் பதிவு செய்த தனது வீடியோ மூலம் 6 வயது சிறுவன் ஒரு ஆண்டில் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் – எஸ்.பி.திசாநாயக்க

wpengine

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

wpengine