7வது கொரோனா நோயாளி மரணம்! வயது 74

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


72 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அவர் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட 8வது மரணமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.


இந்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares