600 கிலோ சாக்லேட்டில் ரஜினியின் கபாலி சிலை!

ரஜினி நடித்து வரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தால் கவர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் ‘கபாலி’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ரஜினி இப்படத்தில் வெள்ளை தலைமுடி மற்றும் வெள்ளை தாடியுடன் நடித்து வருகிறார். ரஜினியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினியின் இந்த தோற்றத்தால் கவர்ந்த சென்னையில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டை கொண்டு ரஜினியின் கபாலி தோற்றத்தை போன்ற ஒரு சிலையை வடிவமைத்துள்ளது. அதை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளது. இந்த சிலையை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.

கபாலி படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares