பிரதான செய்திகள்

6, 11ஆம் திகதி பாடசாலை விடுமுறை

அரச பாடசாலைகளுக்கான 2018 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் 6 ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாவதாக  கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 6 ஆம் திகதி விடுமுறைக்காக மூடப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் 11 ஆம் தகதி புதன்கிழமை விடுமுறைக்காக மூடப்பட்டு இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

100,000 அமெரிக்க டொலர்கள் அவரது மனைவியின் கணக்கில் வரவு

wpengine

சட்ட ஒழுங்குகள் அமைச்சு சரத் பொன்சேகா வசம்? நாளை முக்கிய அறிவிப்பு

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine