Breaking
Fri. May 17th, 2024

மன்னார் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்றிரவு காயங்களுடன் நொச்சிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

முதுகுப் பகுதியில் பலத்த எரிகாயங்களுடன் குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது-38) என்ற குடும்பஸ்தர் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டார்.

குறித்த கடத்தல் குறித்து அவரது மனைவி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஆலய பங்கு பணிமனையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

குறித்த கடத்தல் குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கண் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்றிரவு நொச்சிக்குளம் கிராம பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் அபயக்குரலை செவிமடுத்த சிலர் உடனடியாக உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயங்களுடன் காணப்பட்ட குறித்த குடும்பஸ்தரை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த குடும்பஸ்தரின் முதுகுப் பகுதியில் பலத்த எரிகாயங்கள் காணப்படுகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் கடத்தல் குறித்து மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் ஏன், எதற்காக கடத்தப்பட்டார் என்ற விடயம் இது வரை வெளியாகவில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *