Breaking
Mon. May 20th, 2024

35 வயதிற்கு மேற்படாத 5,500 பட்டதாரிகள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு மூன்று மொழிகளில் இருந்தும் ஆசிாியா்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், 7,500 கல்வியியற் கல்லுாாி ஆசிரியர்களுக்கு எதிா்வரும் 16ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சாா் தொிவித்துள்ளாா்.

இங்கு மேலும் கருத்து தொிவித்த அவா், பௌதீக வளங்களையும் மனித வளங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், அதற்கு மாணவர்களின் ஒழுக்கம் இன்றியமையாதது எனவும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளாா்.

மேலும், சமூகத்தில் உள்ள போதைப்பொருள் போன்ற தவறான நடத்தைகள் மற்றும் தகாத நடத்தைகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன் பாடசாலை நிர்வாகத்தில் அதிபருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பாழைய மாணவா் சங்கங்களின் முறையற்ற தலையீடுகள் பொருத்தமற்றது எனவும், அவ்வாறான விடயங்களை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளாா்.

A B

By A B

Related Post