பிரதான செய்திகள்

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine

விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர் சவால்

wpengine

வவுனியாவில் “இடியன்”துப்பாக்கியுடன் இளைஞன் கைது

wpengine