பிரதான செய்திகள்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கை பிரேரணை! 8ஆம் பங்குபற்ற வேண்டும்

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கட்டாயமாக பங்குபற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் எட்டாம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்வது அனைத்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில், உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், எதிர்வரும் எட்டாம் திகதி
அமர்வில் பங்குபற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள அரசாங்கத் தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களின் பயணத்தை ரத்து செய்து நாடு திரும்ப வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமருக்கு தனது விசுவாசத்தை காட்டிய ரவூப் ஹக்கீம்

wpengine

இணையத்தளங்கள், சமூக வலைத்தள போலிச் செய்தி! அலி சப்ரி நடவடிக்கை

wpengine

சதோச முன்னால் தலைவர் கைது!

wpengine