பிரதான செய்திகள்

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

பனாமா ஆவணங்கள் மூலம் வெளிவந்த ஊழல்கள் பற்றி முதலில் வெளியிட்டது ஊடகங்களே, இதில் ஒருவருடைய பெயர் வந்தவுடன் அவரை குற்றவாளியாக முடிவு செய்துவிடக் கூடாது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உண்மையிலேயே இந்த பனாமா ஆவண ஊழல்கள் பற்றி 2013ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் இது பற்றி பெரிதாக பேசப்படவில்லை என தெரிவித்தார்.

தற்போது பனாமாவில் வந்திருக்கும் சிலரின் பெயர்களை விட, மேலும் பல பெயர்கள் வரும் என எதிர்பார்த்திருகின்றோம் என சுட்டிக்காட்டினார்.

என்னுடைய செயலாளரின் பெயரும் இதில் வந்திருந்தது, உண்மையில் எனது செயலாளர் 30 வருடமாக வேறு ஒரு நிறுவனத்தில் கடமையாற்றி அதன்மூலம் சம்பாதித்த பணமாகக் கூட இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் இதை பெரிதாக்கி விட்டன என்று கவலை வெளியிட்டார்.

பனாமாவில் பெயர் வந்தால் அவர்கள் குற்றவாளிகளா? முறையான வியாபாரத்தை வெளிநாட்டில் செய்பவர்களாக கூட இருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.

இவர்களின் வியாபாரம் பற்றி சில நேரம் அரசுக்கு தெரியாமலும் இருக்கலாம். அவ்வாறு அரசுக்கு தெரிவித்திருந்தால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என அமைச்சர் கூறினார்.

குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அது உறுதியான பின்னரே தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெளிவூட்டினார்.

தற்போது பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல் கட்சிகளின் கணக்குகள் இத்தாலி மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் உண்டு, ஆனால் இவை சட்டவிரோதமானவை எனக் கருத முடியாது எனவும் கூறினார்.

மேலும், யார் என்ன சொன்னாலும் ராஜபக்ச குடும்பத்தினரின் 20 டொலர் பில்லியன் பணம் திருட்டுத்தனமாக நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Related posts

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது கண்டிக்கத்தக்கது’ – மு.கா.ரவூப் ஹக்கீம்!

wpengine

முஸ்லிம் பெண்கள் முகத்தை நிஹாப் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்

wpengine