பிரதான செய்திகள்

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

2020 ஆம் ஆண்டிற்குள் 15 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கிராம சக்தி மக்கள் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

 
பொறுப்புக்களை உணர்ந்த, உரிமைகளை அறிந்த மக்களை உருவாக்கும் நோக்கிலான இந்தத் திட்டம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
2020 ஆம் ஆண்டளவில் மக்களால் நிர்வகிக்கப்படும் 5,000 கிராம சேவகர் பிரிவுகள் இந்த திட்டத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ளன.
 
கிராம சேவகர் பிரிவொன்றிலுள்ள சனத்தொகைக்கு அமைய, ஒருவருக்கு 8,000 ரூபா என்ற வீத முதலீடொன்றை, கிராமிய நிதியமாக நான்கு வருட காலத்திற்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
 
கிராம சக்தி மக்கள் திட்டம் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் செல்வந்தர்கள் இருக்க வேண்டும், எனினும் செல்வந்தர்கள் நாட்டை நிர்வகிக்கக்கூடாது என்பதே தமது கருத்தென குறிப்பிட்டார்.
 
வறுமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, நிலையான அபிவிருத்திக் கொள்கையின் கீழ் எதிர்கால இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts

ராஜாங்க அமைச்சர் பதவியை எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு

wpengine

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் விவாதம்

wpengine

நல்லாட்சி அரசின் நடவடிக்கை குறித்து ஐ.நா.விடம் அமைச்சர் றிஷாட் முறையீடு

wpengine