வர்த்தக கைதொழில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியில் 2018ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடை முறைப்படுத்தப்பட்ட வேலை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2019ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்களை ஆராயும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று வவுனியா மீள்குடியேற்ற மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் வட மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயளாலர் றிப்கான் பதியுதீனின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முஜூப்புர் ரஹ்மான் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.சியாம் முல்லை மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.றிபாய் மற்றும் உதவிப் பொறியியலாளர் ஏ.ஏ.மாஹிர் மற்றும் தொழில்நுற்ப அதிகாரிகள் மாவட்ட அபிவிருத்தி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.
இதன் போது இவ்வருடத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது, மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்தோர் தொடர்பான செயற்பாடுகள் பற்றியும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.