இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இதனை வினவியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாயிரம் ரூபாம் கொடுப்பனவு தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பத்து நாள் ஊரடங்குச் சட்டத்திற்கானதா அல்லது எவ்வளவு காலத்திற்கானது என்பதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் ஆற்றிய உரையில் கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை குறித்து கண்டறியப்பட வேண்டியுள்ளது.
ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை குறைக்க திட்டமிடப்படுகின்றதா என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலம் நாட்டை முடக்க நேரிட்டால் மக்கள் அர்ப்பணிப்புக்களைச் செய்ய ஆயத்தமாக வேண்டுமென ஜனாதிபதி நேற்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது