உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

20 ஆண்டுகள் நடைபெற்ற இப்தாரை ரத்து செய்த டிரம்ப்

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம்.

20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.

ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம்.

இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.

இந்தப் பணிகளை செய்வதற்காக வெள்ளை மாளிகை ஊழியர் ஒரு மாதம் பணியாற்றுவார்கள். அதிபர் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோரின் காலத்திலும் இந்த விருந்து வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படவில்லை. வெறும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து வழங்குவது 1996ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது கிலாரி கிளிண்டன்தான் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். அப்போதிருந்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்று வந்தது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம் விரோத சர்ச்சைப் பேச்சை பேசி வருபவர். அதிபர் தேர்தலின் போதே முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

wpengine

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

wpengine

நாடாளுமன்றை நாறடிக்கும் நாதாரிகள்

wpengine