Breaking
Sat. Apr 27th, 2024

20 ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்த நீதியமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபரால் நீதிமன்றத்தில் முன்வைத்திக்கும் திருத்தங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்வோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறினார்.


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்து சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு சட்ட ரீதியிலான அங்கிகாரம் தொடர்பில் எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பினரால் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற செயற்குழுவின் போது திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியுடன் எனக்கு வழங்கப்பட்டிருந்தன.

அதனை நான் சட்டமா அதிபருக்கு வழங்கியிருந்தேன். அதனையே சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தியிருக்கின்றார்.


மேலும் சட்டமா அதிபரால் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தியிருக்கும் திருத்தங்கள் தொடர்பில் அச்சப்படத்தேவையில்லை. அதனை நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து செயற்குழுவின்போது, குறித்த திருத்தங்களை மேற்கொள்வோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *