Breaking
Sat. May 18th, 2024

மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷ்மன், செப்டெம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார்.

  தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தனது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்பட்டார்.

பேராசிரியர் லக்ஷ்மன் நன்கறியப்பட்ட பொருளியலாளர் ஆவார். இவர் 1994 இலிருந்து 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். 2005இல் கல்வியல் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக தேசமான்ய விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராவார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *