பிரதான செய்திகள்

13வது திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வேண்டும்.

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென வட மாகாண ஆளுனர் சுரேஸ் ராகவன் கோரியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை உள்ளடக்கிய 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்திற்கு உரிய அதிகாரங்கள் அமுல்படுத்தப்படாமை அரசியல் அமைப்பிற்கு முரணானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சனல் 4 ஊடகம் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் காணொளிகளை வெளியிட்டதாகவும் இது குறித்து சாட்சியமளிப்பதற்கு அரச நிறுவனங்கள் முன்வர வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தாம் கொண்டுள்ளதாகவும் இதற்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கில் பௌத்த மத மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக வடக்கு மாகாண ஆளுனர் சுரேஸ் ராகவன் குறிப்பிட்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மைத்திரியின் மாநாடு

wpengine

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி

wpengine