பிரதான செய்திகள்

113 ஆசனங்களைஎந்தப் பெரும்பான்மை கட்சிகளும் பெற முடியாது.

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியவர்களை இம் முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.


தம்பலகாமப் பகுதியில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் இம் முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை கட்சிகளும் பெற முடியாது. ஆகக் குறைந்தது 105 ஆசனங்களையே பெற முடியும்.
இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ், சிங்கள,முஸ்லிம் மலையகத்தை சேர்ந்த கட்சிகள் இணைந்து ஆகக் குறைந்த பட்சம் 45 அல்லது 55 ஆசனங்களை பெற முடியும்.
இதை விடுத்து மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பீதியையும் அச்சுறுத்தலையும் மக்கள் மத்தியில் அறிக்கைகளாக விடுத்து வருகிறார்கள்.


ஆட்சி அதிகாரத்தை ஏப்ரல் 26 ஆம் திகதி சிறுபான்மை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
மாவட்டத்திலும், தேசியத்திலும் குரல் கொடுக்கக் கூடிய எந்த சவாலுக்கும் முகங்கொடுக்கக் கூடியவர்களை நாடாளுமன்றம் அனுப்புங்கள் இதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தவறவிடும் பட்சத்தில் உரிமைகளை இழந்து அடிமைச் சமூகங்களாக மாற்றப்பட்டு விடுவோம்.
சமூக ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆட்சி அதிகாரத்தை எம்மால் கண்டு கொள்ள முடியும்.


சமூகத்தின் இறுப்பை பாதுகாக்கக் கூடிய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் துணிச்சலுடன் பணியாற்றும் தலைவர்களை இம் முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் சக்தியாக மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts

நமது சூழல் மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதும் clean sri lanka வின் ஒரு பகுதியாகும்.

Maash

அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினர் ஆதரவளிக்குமாறு கோரிக்கை-ஜெனரல் சவேந்திர சில்வா

wpengine

மாகாண சபைக்கு சஜித்திடம் தஞ்சமடையும் ரவி,தயா

wpengine