Breaking
Mon. Nov 25th, 2024

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக தெரிவு செய்­யப்­பட்டு 25 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்தி பய­ணத்தை உறுதி செய்­துள்ள ஹஜ் பய­ணிகள் ஹஜ் முக­வர்­க­ளிடம் தமது கட­வுச்­சீட்­டு­களை ஒப்­ப­டைக்க வேண்­டிய இறுதித் திகதி இன்­றாகும்.
இத்­தி­கதி மேலும் நீடிக்­கப்­ப­ட­மாட்­டாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் குறித்து கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ஹஜ் பய­ணிகள் தாம் தெரிவு செய்யும் ஹஜ் முக­வர்­க­ளிடம் உட­ன­டி­யாக இன்று திங்­கட்­கி­ழமை தங்கள் கட­வுச்­சீட்­டு­களை ஒப்­ப­டைக்க வேண்டும். கட­வுச்­சீட்­டு­களை ஒப்­ப­டைக்­கத்­த­வறும் பய­ணிகள் தொடர்பில் திணைக்­களம் பொறுப்­பேற்க மாட்­டாது.

ஹஜ் ஏற்­பா­டு­களில் கால­தா­மதம் ஏற்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்கே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வரை 1400 ஹஜ் பய­ணிகள் தங்­க­ளது கட­வுச்­சீட்­டு­களை ஒப்படைத்திருந்தனர்.

மேலும் 1250 பயணிகள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டியுள்ளன என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *