ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழல்,மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொள்வனவு மற்றும் பயன்படுத்தலின் போது இந்த ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ள விதம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.
அதேவேளை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாக கூறியிருந்தார்.
அத்துடன் இந்த மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கோருவது கேலிக்குரியது என அரசாங்கம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.