செய்திகள்பிரதான செய்திகள்

வைத்தியசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் மரணம்!!!

கண்டி பொது வைத்தியசாலையின் பல மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்து, சிகிச்சை அளிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (12.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹரிஸ்பட்டுவ பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்களுக்கு நிறப்பூச்சு தீட்டும் போது, வைத்தியசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குறித்த நபர் கீழே விழுந்ததாக விசாரணையில் தெரியவந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சடலம் கண்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ்.புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு, கைது செய்யப்பட்ட 3 சிறுவர்கள் . !

Maash

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் எலும்புக்கூடுகள்

wpengine

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

Editor