Breaking
Sat. May 18th, 2024

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8 , 1942 இல் பிறந்த ஸ்டீஃபன் ஹோக்கிங், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்து வந்தார்.

“காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (A brief history of time) உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை இவர் எழுதி உள்ளார்.

ஸ்டீஃபன் ஹோக்கிங் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்.

இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *