வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த விசேட அனர்த்த முகாமைத்துவச் செயலணியுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதி மேற்கண்டவாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெள்ள நீர் வடிந்தோடியதன் பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களில் அதிகளவில் நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் மண்சரிவு ஏற்பட்ட பிரசேதங்களிலும் அதிகளவில் பாதிப்புகள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே குறித்த பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துகிறேன்.
இது இவ்வாறிருக்க இந்த கலந்துரையாடலின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் ஆராயப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் முப்படையினர் அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.