Breaking
Thu. Apr 25th, 2024

அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துவைத்தார். அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவருமான மீரா இஸ்ஸதீனை சந்தித்தார்.

சுகவீனம் காரணமாக வீட்டில் ஓய்வெடுக்கும் மீரா இஸ்ஸதீனிடம் சுகம் விசாரித்து இன்பதுன்பங்களை கேட்டறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களான ரபீக் பிர்தௌஸ், ஏ ஜி ஏ கபூர், எம் எல் சரீப்டீன், எம் ஏ ரமீஸ், எஸ் எம் இர்ஷாட், எப் எம் முர்தளா, பஹத் ஏ மஜீத், அமைச்சரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த முனவ்வர் காதர், எம் என் எம் பர்விஸ், எஸ் எம் இஸ்பான் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.7d0050d1-2c10-4021-8090-b3fc2c506414

ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டதால் அமைச்சருடன் அரசியல் நிலவரம் தொடர்பான பல்வேறு விடயங்களை கருத்துப் பரிமாறினர்.

சுகவீனமுற்று தளர்ந்துள்ள போதும் மீரா இஸ்ஸதீன் அரசியல் தொடர்பில் தெளிவான விடயங்களை புட்டு வைத்தார்.  குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரவு அம்பாறை முஸ்லிம் அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் அவர் சிலாகித்தார்.c3f4cb1e-cabb-4c63-a0db-b415e07a2d5d

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *