Breaking
Thu. May 2nd, 2024
(அஷ்ரப் ஏ சமத்)
எமது நாட்டில் தகவல் அறியும் சட்டமூலம் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். இதன் மூலம் அனைத்து தகவல்களையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். 2001ஆம் ஆண்டில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தினை முன் வைத்தாா்.  எனினும் இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் அது இப்போது சாத்தியமாகியுள்ளது.  என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம் மறைக்காா் தெரிவித்தாா்.

கொலன்னாவையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இரண்டாம் கட்ட கொடுப்பனவாக 10ஆயிரம் ருபா உதவித் தொகையை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தாா்.

அவர் அங்கு  தொடா்ந்து உரையாற்றுகையில்

பிரித்தானிய பிரதமா் டேவிட கமருன் போன்று மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க எமது நாட்டு அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.  எமது அரசியல்வாதிகள் இரண்டு அல்லது மூன்று முறை தோ்தலில் தோல்வியுற்ற பின்பும் மீண்டும் மக்கள் மத்தியில் வாக்கு வரம் கேட்கின்றனா். இவா்கள் மக்களது கருத்துக்கு தலைவணங்காது மமதையுடன் செயற்படுகின்றனா்.ec533deb-ff1c-4368-b116-5a0130d8dc37
b528271a-2753-43d6-9049-7a0f36d4c19f
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *