(அஷ்ரப் ஏ சமத்)
தேசிய ஜக்கியத்தைக் கட்டி எழுப்புவதிலீடுபட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கான பாக்கீா் மாக்காா் நிலையமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து முன்னணி ஊடகப் பிரமுகா்கள் பத்திரிகையாளா்கள் மற்றும் முன்னணி ஊடகப் பிரமுகா்கள் புத்திஜீவிகள் ஆகியோா் ஒன்றினைந்து வெலிகம வில் 2006ஆம் நடாத்திய வெலிகமபிரகடனம் இன்று(19) மீள ஒரு பாா்வை எனும் தலைப்பில் நடைபெற்றது.
இந் நிகழ்வு இன்று கொழும்பு தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சாபாநாயகா் கருஜயசூரிய, ஊடக தகவல் பாராளுமன்ற விவகார அமைச்சா் கயாந்த கருநாதிலக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பிணா் எம். சுமந்திரன், லங்காதீப ஆசிரியா் சிறி ரணதுங்க, பேராசிரியா் சந்திரசிறி ராஜபகச, முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், அதிசங்கைக்குரிய கல்நந்த தம்மாநாந்த தேரா் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.
அத்துடன் ஊடகங்களில் தற்போதைய நோக்குகள் பற்றி ஞயிறு வீரகேசரி ஆசிரியா் எஸ்.பிரபாகரன், நவமணி ஆசிரியா் என்.எம் அமீன், சட்டத்தரணி ஜகத் லியனராச்சி, கலாநிதி டியுட்டா் வீரசிங்க ஆகியோறும் ஊடகவியலளாா்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை தெரிவித்தனா் இந் நிகழ்வுகளை நவாஸ் நெறிப்படுத்தினாா்.
இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து புதிய ஆட்சியில் கடந்த 2016 மாா்ச்சில் பாராளுமன்றத்தில் சகல கட்சிகளும் இணைந்து இந்த நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருதல் வேண்டும் என்ற அரசியலமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது சகல பாராளுமன்ற உறுப்பிணரும் ஏக மனதாக ஆதரவாக வாக்களித்தனா். அன்று எவரும் எதிா்க்கவில்லை. ஆனால் தற்பொழுது இந்த சட்டவரைபுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஊடகங்களில் பல்வேறு கோணத்தில் பல அரசியல் தலைவா்களும் பல்வேறு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனா். இந்த ஊடகங்கள் ஏன் அவா்களை அன்று பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஆதரவு தெரிவித்து விட்டு இப்போது மக்கள் மத்தியிலும் உடகங்களிலும் எதிா்கின்றீா்கள் என கேட்கவில்லை. என கேட்க விரும்புகின்றேன். இவா்கள் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டாம். அல்லது புதிய அரசியலமை வேண்டாம் என சொல்கின்றனா். இவா்களது கருத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவது இந்த ஊடகங்களேயே. தற்பொழுது மக்கள் ஒரு நாட்டின் அல்லது உலகின் முழுக்க ஊடகங்கள் சொல்வதினையே நம்பக் கூடிய தன்மை உள்ளது. ஆகவே தான் இந்த நாட்டில் சகல இனங்களும் ஜக்கியமாகவும் தமது உரிமைகளுடன் வாழ்வதற்கு ஊடகங்கள் முக்கிய பங்களிப்பு வகிக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பிணா் சுமந்திரன் அங்கு உரையாற்றினாா்.
பாக்கீா் மாக்காா் நிலையத்தினால் அன்று 2006 ஆம் வெளிகமவில் நடாத்திய தேசிய ஜக்கியத்திற்கான ஊடகத்தின் ஆரம்ப வைபவத்தில் பங்குபற்றினோன் அன்று உக்கிரமாக நாட்டில் நடைபெற்ற யுத்த காலம், இன்று 10 வருடங்கள் பின் அதே பிரடகடனத்தினை பாாக்கீா் மாா்ககாா் நிலையம் மீளாய்வு செய்யப்படுகின்றது. அப்போது நான் எதிா்கட்சி பாராளுமன்ற உறுப்பிணராக இருந்த சமயத்தில் முன்னைய ஆட்சியில் பாரிய படுமோசமான நெருக்கடிகளை ஊடகங்களும் பொது மக்களும் அனுபவித்தனா். ஜனாதிபதிமுறைமையை கொண்டுவந்த ஜ.தே.கட்சி பின்னா் 1995 -1996 காலப்பகுதியில் கதிா்காமத்தில் கூடி அதிகாரமளிக்கப்பட்ட ஜனாதிபதி முறைமையினை அதிகாரங்களை குறைப்பதற்கு ஒன்று கூடி தீர்மாணம் எடுத்தது. அதன் பின்னா் 1998 வயம்பா மாகாண சபைத் தோ்த்லிலும் ஒன்று கூடி விருப்பு வாக்குமுறையை ஒழிப்பதற்கும் அத்துடன் 17வது அரசியலமைப்பு திருத்த்தினை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தது. இருந்தும் 2 வருடத்திற்குள் ஜ.தே.கடசி முடிவடைந்து விட்டது. தற்பொழுது உள்ள ஆட்சியில் அடுத்த 6 மாதகாலத்திற்குள் சகல சுயதீன முறைமைகளான தோ்தல், ஊடக சுதந்திரம், பொலிஸ், மனித உரிமை, நிருவாகம் போன்ற சகலதும் முன்எடுக்கப்பட்டு அதனை பாராளுமன்றத்தில் அனுமதித்து அதனை நிர்வாக முறையில் கொண்டுவந்ததும் . இந்த நாட்டில் ஒரு நிலையானதொரு சிறந்த ஆட்சிமுறைமை ஏற்படும். இதன் பின்னா் இந்த நாட்டில் வாழும் சகல இனங்களையு்ம் சாா்ந்த பொதுமக்களுக்கும் சிறந்ததொரு நம்பிக்கை ஏற்படும். எனவும் சபாநாயகா் அங்கு தெரிவித்தாா். 
