Breaking
Sat. May 18th, 2024

பாகிஸ்­தானின் பந்­து­வீச்சைப் பலப்­ப­டுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்­று­ந­ராக முஷ்தாக் அஹ்­மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிய­மித்­துள்­ளது.

பாகிஸ்­தானின் முன்னாள் சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரான முஷ்தாக் அஹ்மத் தற்­போது தேசிய கிரிக்கெட் கல்­வி­யத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்­று­ந­ராக பதவி வகிக்­கின்றார்.

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவ­னத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்­று­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

டெஸ்ட் தொடர் முடி­வ­டைந்த பின்னர் சர்­வ­தேச ஒருநாள் மற்றும் இரு­பது 20 கிரிக்கெட் தொடர்­க­ளுக்கு அஸ்ஹர் மஹ்மூத் உதவிப் பயிற்­றுநர் பத­வியைப் பொறுப்­பேற்பார்.

இதே­வேளை பாகிஸ்­தானின் களத் ­த­டுப்பு பயிற்­று­ந­ராக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரிக்சன் பணி­யாற்­றுவார்.

முஷ்தாக் அஹ்மத் கடந்த 2014முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்­றுநர் குழாமில் பல்­வேறு பத­வி­களை வகித்­த­வ­ராவார்.

இங்­கி­லாந்தில் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றி­யுள்ள முஷ்தாக் பயிற்­றுநர் தொழிலில் நல்ல அனு­ப­வ­சாலி ஆவார்.

இவர் 52 டெஸ்ட் போட்­டி­களில் 185 விக்ெ­கட்­க­ளையும் 144 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் 161 விக்ெ­கட்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்­வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் இங்­கி­லாந்­துடன் நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்­டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர். ஒற்றை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *