பிரதான செய்திகள்

வீதியில் கொட்டப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டமையினால் மக்கள் அசௌகரியம்

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பொது மயானத்திற்கு பின் பகுதியில் நகர சபையினால் கொட்டப்பட்ட கழிவுகள் இன்று மாலை தீ வைக்கப்பட்டமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளின் நகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற சகல வித கழிவுப்பொருட்களும் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுவது வழமை.

இந்த நிலையில் குறித்த பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவுகள் இன்று மாலை தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதி புகை மண்டலமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் குறித்த சில மணி நேரம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.625.0.560.350.160.300.053.800.1280.160.95 (1)

குறிப்பாக மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஜே.ஆர்.எஸ்.நிறுவனத்திற்கு பின் பகுதியில் உள்ள சுமார் 40 குடும்பங்கள் வரை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவுப் பொருட்கள் திடீர் என எவ்வித அறிவித்தல்களும் இன்றி எரியூட்டப்பட்டதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அக்கிராமத்தில் உள்ள பலர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீ வைக்கப்பட்டமையினால் எரியுண்ட கழிவுகள் காற்றில் அடித்து வரப்பட்டு தமது வீடுகளினுள் வீழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளர் லெனால்ட் லெம்பேட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல மாதங்களாக மன்னார் நகர சபை குப்பைகளை தீ வைத்து எரிப்பது இல்லை.625.0.560.350.160.300.053.800.1280.160.95 (2)

மாறாக தற்போது உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய கழிவுகள் புதைக்கப்படுகின்றது.

இரும்பு பொருட்களை எடுப்பதற்காக எவரும் தீ வைத்திருக்க முடியும். குறித்த தீயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

எனினும் தீ முழுமையாக பரவியுள்ளது. குறித்த விடயத்தில் நகர சபை நடவடிக்கை எடுக்கும்.

இனி வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

Related posts

வவுனியா நகர் பகுதி பாடசாலையில் சட்டவிரோத பணம் வசூலிப்பு

wpengine

வவுனியாவில் நாளை ஊடக செயலமர்வு

wpengine

இழப்புகளை படிப்பினையாக கொண்டு தமிழ்,முஸ்லிம் இணைந்து செயற்பட வேண்டும் றிஷாட்

wpengine