பிரதான செய்திகள்

வீட்டை சுத்தப்படுத்திய இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில்

புத்தாண்டினை முன்னிட்டு வீட்டை சுத்தப்படுத்திய இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நிக்கவரெட்டிய பகுதியில் வசிக்கும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

வைத்திய நிலையம் ஒன்றில் சேவை செய்த 23 வயதான திருமணமாக இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டை சுத்தப்படுத்திய பெண்ணின் உடம்பில் திடீர் எரிச்சல் ஒன்று ஏற்பட்டுள்ள கூறிய நிலையில் உறங்க சென்றதாக பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த மகள் தலை வலிப்பதாக கூறி இரண்டு வலி மாத்திரைகளை குடித்து விட்டு தலைக்கு எண்ணெய் பூசியுள்ளார்.

சற்று நேரத்தில் வாந்தி எடுத்த மகளின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் வைதை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு நிலையத்திற்கு கொண்டு செல்ல வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

மன்னார் நகரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம்- எம்.பிரதீப்

wpengine

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

wpengine

10 மணிநேர போராட்டம், வசமாக சிக்கிய மோசமான ஜோடி.

Maash