அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடிப்படையாக கொண்டு இவர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அப்போது சாகல ரத்நாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றியதுடன் பியசேன கமகே இந்த அமைச்சின் ராஜாங்க அமைச்சராக கடமையாற்றினார்.
இந்த நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சாகல ரத்நாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே அமைச்சர்கள் பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டே அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.