Breaking
Sat. Nov 23rd, 2024

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்டவிரோத கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாரு கோரி சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் திகதி அறிவிப்பு இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று (31) குறித்த ரீட் மனு தொடர்பிலான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோரால் அறிவிக்கப்படவிருந்த நிலையிலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த நீதிபதிகள் இருவர் உள்ளடங்கிய அமர்வுகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மேன் முறையீட்டு நீதிமன்றின் 204 ஆம் இலக்க விசாரணை அறையில் இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் வில்பத்து விவகார வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் தொடர்பில் எந்த அறிவித்தல்களும் நேற்று மாலைவரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *