Breaking
Mon. May 6th, 2024

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் மூழ்கி புத்தளம் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார்.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 36,370 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, 16 தற்காலிக முகாம்களில் 201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் என்பன பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் வெள்ளத்தினால் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் மூவரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், மஹாவெவ மற்றும் வண்ணாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவருமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி, சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 97 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *