எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் வெளியிடப்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 12ஆம் திகதி சிறு கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்த உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் விருப்பு வாக்கு இலக்கங்களை அறிவிக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விருப்பு வாக்கு இலக்கங்களை கடந்த வாரம் வழங்குவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்த போதும் தொற்று நோய் பரவுகை, தேர்தல் குறித்த நிச்சயமான திகதியை நிர்ணயம் செய்ய முடியாமை போன்ற காரணிகளினால் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களை அறிவிப்பதானது தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆரம்பமாகவே கருதப்படுகின்றது.
எவ்வாறெனினும், இந்த விருப்பு வாக்கு இலக்கம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.