பிரதான செய்திகள்

விக்னேஸ்வரன்,சம்பந்தன் போன்றோரின் இனிப்புகளுக்கு முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்

வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் வடமாகாணத்துக்கு ஆதரவாக ஒருபோதும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் சீர்திருத்தம் ஒன்றை உருவாக்கி அதில் முஸ்லிம்களுக்கும் ஒரு பகுதி தருவதாக கூறி இனிப்புகளை ஊட்டும் விக்னேஸ்வரன், சம்பந்தன் போன்றோரின் விளையாட்டுக்களுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் காலங்காலமாக நாட்டில் காணப்படும் இன ஒற்றுமையை யாராலும் அழிக்க முடியாதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine

மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பேஸ்புக் காதல்

wpengine

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் நேற்று மரணம்

wpengine