பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்கல்

தம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் இந்த மனுவில் கோரியுள்ளார்.

தம்மிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து இப்போது பதவி வகிக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோர் அந்த துறைகளுக்குரிய அமைச்சர்களாகச் செயற்படுகின்றமைக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படியும் அவர் இந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.குணசீலன், முன்னாள் அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டிய

wpengine

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

wpengine

நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களின் போராட்டம் நிறைவு!

Editor