பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் இன்று முதல்

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலாவது,

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு, எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்கபடவுள்ளதுடன், பூரணப்படுத்தப்படும் வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதிக்கு பின்னர் சேகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்காளர் இடாப்பு மீளாய்வு தொடர்பில் முதற்கட்ட நடவடிக்கைகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்துவதற்கும் நவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

மேலும், இது குறித்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில், மாவட்டப் பிரதிநிதிகள் அல்லது உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், அங்கவீனமடைந்துள்ள வாக்காளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் பெண்களை அச்சுறுத்தும் நிதி நிறுவனங்கள்

wpengine

வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – உதுமாலெவ்வை

wpengine

பைசல் காசிமின் அறிக்கை! பிள்ளைகள் எழுதிப்பழகியது போல உள்ளது.

wpengine