Breaking
Sun. Nov 24th, 2024

ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தை மூடி மறைத்­தமை மற்றும் சாட்­சி­களை மறைத்­தமை உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்­களின் கீழ் ஓய்­வு­பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­கவை கைது செய்ய குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இது குறித்த குற்றச் சாட்­டுக்­களின் கீழ் கடந்த வாரம் வஸீமின் கொலை தொடர்பில் ஆரம்­பத்தில் விசா­ர­ணை­களை நடத்­திய அப்­போ­தைய நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, அனுர சேன­நா­யக்க கைதா­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கைதான முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­மிக பெரேரா, குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தில் அப்­போது தனது உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் தனக்கு கொடுத்த அழுத்தம் மற்றும் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­யவே தாஜுதீன் விவ­கா­ரத்தை விபத்­தாகக் காட்டி கொலையை மூடி மறைத்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார். இந் நிலை­யி­லேயே அப்போது இது குறித்த விசா­ர­ணை­களை மேற்­பா­ர்வை செய்த முன்னாள் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக   கட­மை­யாற்­றிய அனுர சேன­நா­யக்க கைது செய்­யப்படும் வாய்ப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.

எவ்­வா­றா­யினும் தாஜுதீன் விவ­கா­ரத்தில் அனுர சேன­ந­ாயக்க கைது செய்­யப்ப­டு­வ­தற்கு முன்னர் மேலும் இரு பொலிஸ் உயர் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­ப­டலாம் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. தற்­போது முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரியே கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அப்­போ­தைய நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, அப்­போ­தைய பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகியோர் அடுத்த கட்­ட­மாக விசா­ர­ணையை எதிர்கொண்­டுள்ள நிலையில் அவர்­களின் கைதை தொடர்ந்து அனுர சேன நாயக்­கவின் கைது இடம்­பெ­றலாம் எனவும் பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

இத­னி­டையே அனுர சேன­நா­யக்­கவை கைது செய்தால் அவரை இந்த படு­கொலை விவ­கா­ரத்தில் அரச சாட்­சி­யாக முன்­னி­லைப்­ப­டுத்­து­வது குறித்த கருத்­துக்­களும் தற்­போது பரவி வரு­கின்­றன. எனினும் இது குறித்த எந்­த­வொரு தீர்­மா­னத்­தி­னையும் நேற்று மாலை வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு எடுத்­தி­ருக்­க­வில்லை என்­பது இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்­றுடன் மோதி­ய­வாறு எரிந்­து­கொண்­டி­ருந்த காரில் இருந்து கரு­கிய நிலையில் வஸீம் தாஜுதீன் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

இந் நிலை­யி­லேயே கடந்த 2015 பெப்­ர­வரி 26 ஆம் திகதி இது குறித்த விசா­ர­ணைகள் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோ­னினால் குற்றப் புல­னாய்வுப் பிரிவுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. தற்­போது இது குறித்த விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *