Breaking
Sun. Apr 28th, 2024
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) மற்றும் பராமரிப்பு ஒதுக்கீட்டின் கீழ் 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.

அதன் அடிப்படையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, நெடுங்கேணி கூளாங்குளம் வீதியினை 04 மில்லியன் ஒதுக்கீட்டில் மாகாண சபையின் உறுப்பினர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவும் அப்பகுதி மக்களது நலனைக் கருத்தில் கொண்டும் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் இந்த ஆண்டு முதலமைச்சர் உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ஒதுக்கீட்டில், மாகாண சபை உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்களின் தெரிவின் அடிப்படையில் இவ்வீதியின் வேலைத்திட்டத்தை நேற்று 02-05-2016 திங்கள் காலை 10 மணியளவில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

ad58b5a4-33a9-42a5-a53a-af2ea8fcd1ed

 நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.மயூரன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் கே.சத்தியசீலன், வவுனியா மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ்  மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.9cb00d7c-8be2-4665-baa9-a28886e0b5b5

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *