பிரதான செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் கலை பிரிவில் முதலிடம்

ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலை பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த டிலாஜினி சண்முகேஸ்வரராஜா 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளியாகிய பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பெறுபேறு வந்த போது நானும் அடுத்தமுறை முதலாவதாக வர வேண்டும் என நினைத்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றினேன். சட்ட துறையில் படித்து ஒரு சட்டத்தரணியாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அ.இ.ம.கா.கட்சியின் சுகாதார சேவைகள் ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள்

wpengine

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine