பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.

சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் என்ற 40 வயது குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின்! ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள்

wpengine

எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி

wpengine

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

wpengine