Breaking
Fri. May 3rd, 2024
(ஊடகபிரிவு)

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்திக்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ்  65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதிகளின் வேலைத்திட்டங்களை வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக ஆரம்பிக்கும் பணிகள் 27-04-2016 புதன் காலை 10:00 மணியளவிலிருந்து வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அந்த வகையில் நாச்சிக்குடா மீனவர் வீதியை ஆரம்பித்துவைத்து அங்கு உரையாற்றிய வேளை நம்முடைய இந்த மூவின சமூகமும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையிலே தனிப்பட்ட நபர்களது பிரச்சினைகளை இனம் சார்ந்த பிரச்சினைகளாக சித்தரித்து இருக்கின்ற ஒற்றுமையை சீர்குலைத்தால் மீண்டும் அதனைக்கட்டிஎளுப்புவது முடியாத காரியம் என்றும், அந்த வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம்முடைய மாவட்டத்தையும் மாகாணத்தையும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும்.

9e212b18-8263-4be2-a558-6ec3b124f4a4

என்றும், தனது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வேலைத் திட்டங்களும் 5 மாவட்டங்களுக்கும் சரியான முறையிலே தாம் பிரித்து வழங்குவதாகவும், எதிலும், இனமென்றோ மதம் என்றோ பாகுபாடு காட்டுவதில்லை என்றும் தெரிவித்தார், அத்தோடு கீழ்க்காணும் வீதிகள் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

01 – நாச்சிக்குடா மீனவர் வீதி –  02 மில்லியன்
02 – செம்பன்குன்று பாலாவி கிராஞ்சி வீதி – 08 மில்லியன்
03 – வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு வீதி – 06 மில்லியன்
04 – முருகண்டி அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் வீதி – 11.81 மில்லியன்
05 – அக்கராயன் நல்லூர் வீதி (முட்க்கொம்பன்) – 06 மில்லியன்
06 – முரசுமோட்டை கொக்காவில் கருப்பட்டிமுறிப்பு வீதி – 5.5 மில்லியன்
07 – டெய்லர் வீதி உருத்திரபுரம் – 05 மில்லியன்
08 – புதுமுறிப்பு கோணாவில் வீதி – 06 மில்லியன்
09 – பண்டிசுட்டான் கண்டாவளை வீதி –  5.5 மில்லியன்
10 – புதுமுறிப்பு வீதி – 06 மில்லியன்
போன்ற வீதிகளின் ஒருசில பகுதிகள் மக்களுடைய நலன் கருதி சிறந்த முறையிலே இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.fbf59640-5053-48a9-b739-0adcf96e6cb0
மேற்படி நிகழ்வுகளில் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.ஜெகானந்தன், ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.640936cc-4e4b-491e-9653-abcb78d5ee64
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *