Breaking
Sat. Nov 23rd, 2024

வவுனியா – ஓமந்தை பொலிஸாரினால் போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்டோவின் வழிநடத்தலில் கீழ் இன்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில், பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வரக்காபொலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நாளை ஆஜர்ப்படுத்தவுள்ளதுடன் இனிப்பு பண்டங்களை இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *