Breaking
Thu. May 2nd, 2024

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருவேன் என்று வாக்குறுதியளித்த ஞானசார தேரருக்கு அதனை நிறைவேற்ற இன்னும் 10 நாட்கள் எஞ்சியிருக்கின்றன.
கடந்த மாதம் 17ஆம் திகதி மேற்படி கோரிக்கையை முன்வைத்து கல்முனையில்ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 22ஆம் திகதி கல்முனைக்குவந்த பொதுபலசேனா செயலாளர்நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்படி உறுதிமொழியை வழங்கி தண்ணீர் வழங்கி பிரீத் ஓதி நிறைவு செய்திருந்தார்.

அதன்படி, அவரது ஒரு மாதகாலம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும் 10 தினங்கள் எஞ்சியிருக்கின்றன.

அரசாங்கம் அதனைத்தரத் தவறினால் அவரே வந்து மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கல்முனையில் ஆரம்பிக்கவிருப்பதாவும் கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த 7ஆம் திகதி கண்டிக்கு சென்ற கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கலகொடஅத்தே ஞானசாரதேரரைச் சந்தித்து கல்முனை விவகாரத்தை ஞாபகமூட்டியுள்ளனர்.

தாம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் அமைச்சருடன் இதுதொடர்பாக பேசியுள்ளதாக அவரால் சொல்லப்பட்டுள்ளது.

எது எப்படியிருந்தபோதிலும் ஞானசார தேரரின் வாக்குறுதியை பெரிதும் நம்பி நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் கல்முனை வாழ் தமிழ்ச் சமுகம் உள்ளது என்பது மட்டுமே நிதர்சனமாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *