Breaking
Fri. Nov 22nd, 2024
(செட்டிகுளம் சர்ஜான்)
வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் பயணம் செய்த மக்களை செட்டிகுளம் கிறிஸ்தவ குளம் காட்டுப்பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்ட சம்பவமொன்று  இன்று மாலை இடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
வவுனியா பிஹிடியா பாம்,ஆண்டியா புளியங்குளம், மெனிக்பாம் போன்ற கிராமங்களில்ருந்து தமது அன்றாட தேவைகளுக்காக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து செட்டிகுளம் பிரதேசத்திற்கு வருகை தரும் மக்கள் மற்றும் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட பலரும் காத்துக்கிடந்த நிலையில் வவுனியா நகரிலிருந்து வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் பீகிடியா பாம் கிராம மாணவர்கள் பஸ்ஸில் ஏறியபொழுது அவர்கள் பஸ் நடத்துனர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.20af7cd0-bfff-480b-aa7d-601ba509ae5f
பின்னர் அங்கிருந்த சில ஆண்டியாபுளியங்குளம் மக்கள் பஸ்ஸில் ஏறியபொழுது அவர்களை கிறிஸ்தவகுளம் பகுதியில் இறக்கிவிட்டு தங்களுக்கு இதுவரை செல்லத்தான் அனுமதியுண்டு என தெரிவித்த பஸ் நடத்துனர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்த பொதுமக்களுக்கிடையும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் நடுவீதியில்  இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
71eff549-7e02-4e88-8f4c-edfbcbbcb6fe
பின்னர் பொதுமக்களால்  வவுனியா இ.போ.சபை காரியாலயத்துடன் தொடர்பு கொண்டபொழுது குறித்த பொது இலக்கம் நீண்ட நேரம் அழைக்கப்பட்ட போதும் அது பயனளிக்காத நிலையில் அங்கிருக்கும் உயர் அதிகாரி ஒருவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்த  போது குறித்த இலக்க அதிகாரி சம்பவத்தை கேட்ட பின்னர் முறையற்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பொது இலக்கத்துடன் தொடர்பு கொண்ட பொழுது அது பயனளிக்காத நிலையில் அங்கிருக்கும் உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பை ஏற்ப்படுத்திய பொழுது அவர் மேலதிகாரியின் இலக்கத்தை வழங்கினார்.
மீண்டும் நாம் குறித்த மேலதிகாரியிடம் தொடர்பை ஏற்ப்படுத்திய பொழுது தனக்கு குறித்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சாரதி புதியவர் என்றும் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென்றும் அங்கிருந்த பயணிகளில் நால்வர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அவரிடம் கேற்கப்பட்ட பல கேள்விகளுக்கு  பதில் கிடைக்கவில்லை என்பதுடன் தான் குளியறையில் இருப்பதாகவும் பின்னர் அழைக்குமாறும் அவர் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மீண்டும் அழைக்கப்பட்ட பொழுது எமது கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தமக்கு இதுவரை முன்னர் வழங்கப்பட்ட முறைப்பாடுகளைத்தவிர வேறு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்றும் குறித்த பேரூந்து நேர சூசிகளையும் குறிப்பிட்டார்.
குறித்த பஸ் நடாத்துனர்களால் பொது மக்கள் இறக்கிவிடப்பட்ட இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யானை தாக்கி தலை உயிரிழந்திருந்தார்.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் பலமுறை உரியவர்களிடமும் முறைப்பாடுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டனர்.
குறித்த பேரூந்து வண்டிகளுக்கு பீகிடியா பாம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை பஸ் நடத்துனர்கள் புறக்கணிப்பதால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலை தமது சந்ததியினருக்கும் ஏற்ப்படுமென்று நினைத்தால் உரியவர்களால் அந்த மக்களுக்கான கடமை சரிவர நிறைவேற்றப்படுமல்லவா?
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *