Breaking
Sat. Apr 20th, 2024

(என்.எம்.அப்துல்லாஹ்)

28-02-2016 அன்று யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்), மாவை சேனாதிராஜா(பா.உ), அங்கஜன் இராமநாதன் (பா.உ)  ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தியோடு தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன, யாழ் மாவட்ட நிர்வாகம் தொடர்பிலலான விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் பின்னர் இபோது 2010 முதல் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வருகின்றார்கள் கடந்த 5 வருடங்களாக இவர்கள் மீள்குடியேற்ற விடயங்களிலே பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். இவற்றுள் குறிப்பாக ஒரு சில  அதிகாரிகளின் பக்கச்சார்பு நடவடிக்கைகளால் பல்வேறு இன்னல்களை அந்த மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

குறிப்பாக வீடமைப்பு விடயத்தில் இவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்திய வீட்டுத்திட்டத்தில் இந்திய அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 300 வீடுகளை வழங்குவதற்கு இணங்கியிருந்தது, ஆனால் அது நடைபெறவில்லை 48 வீடுகள் மாத்திரமே முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டன; இவ்வாறான அதிகாரிகள் இருக்கின்ற வரை எமது மக்களின் மீள்குடியேற்றம் சீராக இடம்பெறாது. குறித்த அதிகாரி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பதவியில் இருந்து இடம் மாற்றப்படவேண்டும், அவ்வாறு இடம் மாற்றம் நடக்கும்போது வறிய மக்களைக் கையாளுகின்ற திணைக்களங்களுக்கு அவர்கள் நியமிக்கப்படுவதைத் தவிர்த்தல் சிறப்பானது என்று கருதுகின்றேன். என்று குறிப்பிட்டார்.

இ.ஆர்னோல்ட் அவர்களும் இதுவிடயத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளருக்கு மாற்றம் கிடைத்தும் அவரை தொடர்ந்தும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கடமையாற்ற அனுமதித்தமை மிகவும் மோசமான செயல் என்று குறிப்பிட்டார்.

இங்கு கருத்துவெளியிட்ட .சிறீதரன் (பா.உ) அதிகாரிகளை பொது இடங்களில் வைத்து குறை கூறூவது சிறப்பானதல்ல, அவர்களோடு இதனை தனிப்பட்ட ரீதியில் அணுக முடியும், அதேபோன்று அஸ்மின் அவர்கள் இந்தப் பிரச்சினைகளை இனரீதியாக நோக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ; மேற்படி விடயத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம் கேட்க முடியாது, உங்கள் சமூகத்தவர்கள் வெளி மாவட்டங்களில் இரண்டு மூன்று வீடுகளை வைத்துக்கொண்டு இங்கே வீடுகளை கோருகின்றீர்கள் சவுதி அரேபியா நாடுகளில் இருந்து வீடுகளைக் கொண்டுவருகின்ற அமைச்சர்களிடமும் நீங்கள் வீடுகளைக் கேட்கலாம்தானே என்று குறிப்பிட்டார் அதற்கு சபையில் இருந்த ஒருசிலர் கைதட்டி அந்தக் கருத்தை வரவேற்றனர்.

இதன்போது குறுக்கிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்; இதுபோன்ற விடயங்களை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார், அதற்கு குறுக்கிட்ட அஸ்மின் அவர்கள், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சொல்வதற்கான அதிகாரம் உரித்தும் எமக்கு இல்லையா என்று கேட்டார்; அதற்கு முதல்வர் அப்படி இங்கே பேச முடியாது என்று தெரிவித்தார்.

அப்போது மற்றுமொரு இணைத்தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள்; அவ்வாறான விடயங்களை இங்கே பேச முடியும், முஸ்லிம்கள் தொடர்பில் நாம் விஷேட கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்தல் அவசியமாகும், அதிலே எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துபேசி நல்ல தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *