பிரதான செய்திகள்

வவுனியாவில் மர்மமான முறையில் கொலையான காவல் துறை அதிகாரி

வவுனியாவில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர் சடலமாகக் கிடந்ததை, அவருடைய வீட்டிற்கு மணல் ஏற்றிச் சென்ற வாகன சாரதியொருவர் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் பணியாற்றியிருந்து, இப்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுள்ள 59 வயதுடைய விக்கிரமரட்ன குணசிறி என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு அவருடைய வீட்டில் விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றபோது, இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related posts

அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம்

wpengine

மன்னாரில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய மக்கள் .

Maash

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிய வசதி

wpengine