பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் மருமகனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மாமியர்! இருவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் மருமகனின் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் மாமியர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (16) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு பேருந்தில் வருகை தந்த மருமகன், மாமி, மச்சான் ஆகிய மூவரும் வவுனியா தெற்கு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது குறித்த வாய்த்தர்க்கம் அதிகரித்துள்ள நிலையில் மருமகன் தம்வசம் வைத்திருந்த கத்தியினை எடுத்து மாமி , மச்சான் ஆகிய இருவர் மீதும் குத்தியுள்ளார்.

இதன் போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்தமையினை அவதானித்த பொதுமக்கள் கத்தியால் குத்திய நபரை மடக்கி பிடித்தமையுடன் படுகாயமடைந்த இருவரையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine

அமெரிக்காவை யாரும் அச்சுறுத்த முடியாது! செப்டம்பர் 11 டிரம்ப்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள்

wpengine