பிரதான செய்திகள்

வவுனியாவில் அபாய ஒலி! பயணிகள் அச்சம்

வவுனியா ,தண்டிக்குளம் ரயில் கடவையில் உள்ள அபாய மணி ஒலி கடந்த 2 மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்படுவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நிற்பதால்  அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

குறித்த  ரயில் கடவையானது பாதுகாப்பற்றது  கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார்.

மேலும் குறித்த ரயில் கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் உயிருடன் விளையாடாது   ரயில் திணைக்களம் இதற்கு உடனடியாக  நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

Related posts

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

wpengine

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

wpengine

தமிழ் ,முஸ்லிம் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில தமிழ் அரசியல் தலைவர்கள்

wpengine